ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் ‘செல்லோ ஷோ’ படத்தில் நடித்த சிறுவன் புற்றுநோய்க்கு பலி.!

சினிமா துளிகள்

ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் ‘செல்லோ ஷோ’ படத்தில் நடித்த சிறுவன் புற்றுநோய்க்கு பலி.!

ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் ‘செல்லோ ஷோ’ படத்தில் நடித்த  சிறுவன் புற்றுநோய்க்கு பலி.!

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பிலிருந்து சென்றுள்ள லாஸ்ட் பிலிம் ஷோ படத்தில் நடித்த ராகுல் கோலி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தான். அவனுக்கு வயது 10. தியேட்டரில் ஆபரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்து பொழுதை கழிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய படம் லாஸ்ட் பிலிம் ஷோ.

இந்த குஜராத்தி படம், ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு பட பட்டியலில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

அதில் ராகுல் கோலியும் ஒருவன். இவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். வரும் 14ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ராகுல் நேற்று மரணம் அடைந்தான். இது பற்றி அவனது தந்தை ராமு கோலி கூறும்போது, ‘கடந்த சில வருடத்துக்கு முன் படப்பிடிப்பில் ராகுல் நலமாக இருந்தான். சமீபத்தில் படத்தை பார்த்து ரசித்தான். தியேட்டருக்கு படம் வந்ததும் அதை சென்று பார்க்கலாம் என கூறிக்கொண்டிருந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று ரத்த வாந்தி எடுத்தான். புற்றுநோய் அவனது உயிரை பறித்துக்கொண்டது’ என கண்ணீர் மல்க கூறினார்.

Leave your comments here...