ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் : துணை மேலாளர் சஸ்பெண்ட்

தமிழகம்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் : துணை மேலாளர் சஸ்பெண்ட்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம்  : துணை மேலாளர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் மூலம் நாள்தோறும் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்கள் தயாரித்து விநியோகித்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஒரு டெப்போவில் மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பால் பாக்கெட்டை வாங்கிச் சென்றுள்ளார். அந்த பாக்கெட்டிற்குள் ‘ஈ’ மிதப்பதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆவின் அதிகாரிகள் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவிற்கு சென்று தீவிர ஆய்வு நடத்தினர். இதன்பேரில் பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பால் தயாரிப்பு பணியில் இருந்த மதுரை ஆவின் துணை மேலாளர் சிங்காரவேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆவின் பொதுமேலாளர் சாந்தி தொடர் விசாரணை நடத்தி வருகிறார்

Leave your comments here...