இறை நம்பிக்கையை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் 26ம் தேதி அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!

அரசியல்

இறை நம்பிக்கையை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் 26ம் தேதி அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!

இறை நம்பிக்கையை இழிவுபடுத்திய ஆ.ராசாவை  கண்டித்து தமிழகமெங்கும் 26ம் தேதி அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம்   – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!

இறை நம்பிக்கையை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் 26ம் தேதி அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;- திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் தொன்மையையும் இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு. கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும். ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள்.

திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத்தக்கது.திமுகவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை.. தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க பாஜக தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம், காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave your comments here...