அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம் – எடப்பாடி பழனிசாமி..!

அரசியல்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம் – எடப்பாடி பழனிசாமி..!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம் – எடப்பாடி பழனிசாமி..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கலவரத்தில் முடிந்தது. நீதிமன்ற அனுமதியின்பேரில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார். அவ்வகையில் இன்று ஓபிஎஸ் அணியினரை கூண்டோடு நீக்கியிருக்கிறார். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விஎன்பி வெங்கட்ராமன், இரா.கோபாலகிருண்ணன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்பிஎம் சையதுகான், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்ஜிஎம் சுப்பிரமணியன், எஸ்ஏ அசோகன், ஓம்சக்தி சேகர், ப.ரவீந்திரநாத், வி.ப.ஜெயதீப், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், அம்மன் பி.வைரமுத்து, டி.ரமேஷ், பி.வினுபாலன், கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, சைதை எம்எம் பாபு, எஸ்ஆர் அஞ்சுலட்சுமி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Leave your comments here...