அதிமுக பொதுக்குழு நடைபெறுமா…? வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு..!

அரசியல்

அதிமுக பொதுக்குழு நடைபெறுமா…? வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு நடைபெறுமா…? வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு..!

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி நடந்தபோது, ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதையடுத்து ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மீண்டும் பொதுக்குழு வருகிற 11-ந்தேதி நடைபெறும் என்று அப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு காரசார வாதங்களை முன்வைத்தனர். இரு நாட்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். நீதிபதியின் கேள்விகளுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை வரும் திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பிறப்பிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு திங்கள் கிழமை காலை 9.15 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டு நிலையில், தீர்ப்பு 15 நிமிடங்களுக்கு முன்பாக வெளியாக உள்ளது. இதனால், சென்னை ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் என்னவாகும் என்று நிலை உள்ளது. திட்டமிட்டபடி பொதுக்குழு உறுப்பினர்கள் கூடினாலும், தீர்ப்பை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை செல்லும் என்பதால், அதிமுகவில் இரு தரப்பினர் இடையேயும் உச்ச கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave your comments here...