ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை – கொண்டாடும் சீனர்களின் கொடூர முகம்..!

உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை – கொண்டாடும் சீனர்களின் கொடூர முகம்..!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை – கொண்டாடும் சீனர்களின் கொடூர முகம்..!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சீனர்கள் அவர்களின் சொந்த சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். கொலையாளியை ஹீரோவாக்கியவர்கள், அபே மரணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கையை இரு நாடுகளும் மாறி மாறி விமர்சித்து வருவது வாடிக்கை. இச்சூழ்நிலையில் ஜப்பானில், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை சீனாவின் சொந்த சமூக வலைதளங்களில் சீனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீனாவை சேர்ந்த அரசியல் கார்ட்டூனிஸ்ட் படியுகவோ என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அபே மரணத்தை சீனர்கள் கொண்டாடி வருவதையும், கொலையாளியையும் ‘ஹீரோ’ ஆக புகழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ஒருவர் அபேவுக்கு ஏற்பட்டுள்ள கதி, தற்போதைய ஜப்பான் பிரதமர் மற்றும் கொரிய அதிபருக்கும் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், அபேவின் மரணத்திற்காக பிரசாரம் செய்வோம் எனக்கூறியுள்ளார்.மற்றொருவர், ஜப்பானுக்கு எதிரான ஹீரோவுக்கு வாழ்த்துகள். தற்போது நான் சிரிக்கவா எனக்கூற, இன்னுமொருவர் கொண்டாடலாமா எனவும், மகிழ்ச்சியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அவரை கொல்ல முடிவெடுத்தேன் – கைதான நபர் பரபரப்பு தகவல்!

இந்நிலையில், கூட்டத்தில் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு நின்ற யமகாகி என்ற அந்த நபர், ஷின்சோ அபேவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் அவரின் பாதுகாவலர்கள் ஓடி வந்து ஷின்சோ அபேவை தூக்கினார்கள். வேறு சில பாதுகாவலர்கள் ஷின்சோ அபேவை சுட்டவரை ஓடி சென்று பிடித்துள்ளனர்.

இந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அபேவைத் தாக்கிய நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷின்சோ அபேவின் செயல்களால் அவன் அதிருப்தி அடைந்ததால், அவரை கொல்ல முடிவெடுத்து சுட்டுகொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்

Leave your comments here...