பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரபு சவான் எச்சரிக்கை..!

இந்தியா

பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரபு சவான் எச்சரிக்கை..!

பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரபு சவான் எச்சரிக்கை..!

பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பிரபு சவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– கர்நாடகத்தில் பசுவதை சட்டம் அமலில் இருந்து வருகிறது. மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிமாநிலங்கள், பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பசு மாடுகளை கடத்தி வருவது, மாட்டிறைச்சியை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளதால், எந்த சூழ்நிலையிலும் பசு கொல்லப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் தற்போது பக்ரீத் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலி கொடுப்பதற்கு பதிலாக, அவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.

பக்ரீத் பண்டிகைக்கு பெங்களூரு நகரில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல், மற்ற மாவட்ட மற்றும் தாலுகா அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...