ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்திய குடிநீர் நிறுவனம் – பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

இந்தியா

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்திய குடிநீர் நிறுவனம் – பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்திய  குடிநீர் நிறுவனம்  – பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை கிளை அலுவலகம்-II, சென்னை 600 113 இன் அதிகாரிகள் குழு இன்று ஸ்ரீ பாலாஜி அக்வா நிறுவனத்தில் (எண்.27, ஸ்ரீ கிருஷ்ணா நகர், புழல் கிராமம், மாதவரம் தாலுக்கா, சென்னை, திருவள்ளூர்-600066) ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பெயரில், அமலாக்க சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்

இந்தச் சோதனையின் போது, பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம் எந்த செல்லுபடியாகும் உரிமமும்/அங்கீகாரம் இல்லாமல், “நேச்சுரல் பிளஸ்” என்ற பிராண்ட் பெயரில் PET பாட்டில்களில் நிரப்பப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரில் ISI முத்திரையை தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இது பிஐஎஸ் சட்டம் 2016-ஐ மீறும் செயல் என்பதால் இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது

BIS SRO, CNBO-II, சென்னை ஆல் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 2,00,000/- அபராதம் விதிக்கப்படும். Section 29 of BIS Act, 2016 இல் கூறப்பட்டுள்ளபடி, பொருளின் மதிப்பை போல பத்து மடங்கு அல்லது BIS Standard Mark ( Including Hallmark ) முத்திரையிடப்பட்ட தயாரிக்கப்பட்ட /விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்படும்.எனவே ISI முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், BIS தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo2@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகார்கள் செய்யப்படலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

மேலும் தகவலுக்கு, BIS SRO சென்னை அலுவலகத்தை தொலைபேசி எண்: 044-2254 1984 இல் தொடர்பு கொள்ளவும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் eBIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவக்கூடும்.

Leave your comments here...