ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசைப் பட்டியல் வெளியீடு : குஜராத் முதலிடம் – புது கொள்கைகளை முன்னெடுப்பதில் முன்னணியில் தமிழகம்!

இந்தியா

ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசைப் பட்டியல் வெளியீடு : குஜராத் முதலிடம் – புது கொள்கைகளை முன்னெடுப்பதில் முன்னணியில் தமிழகம்!

ஸ்டார்ட்-அப் இந்தியா  தரவரிசைப் பட்டியல் வெளியீடு : குஜராத் முதலிடம் – புது கொள்கைகளை முன்னெடுப்பதில் முன்னணியில் தமிழகம்!

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் மூன்றாம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய வர்த்தக-தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, 2021ம் ஆண்டுகான மாநிலங்களுக்கான 3ம் ஆண்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. போட்டித்தன்மை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி என்ற தொலைநோக்குத் திட்டத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

ஸ்டார்ட்-அப் எனப்படும் ஆரம்பகால நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்களது கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆய்வு 2018-ம் தொடங்கப்பட்டது. அக்டோபர் 1, 2019 முதல் ஜூலை 31, 2021 வரையிலான காலகட்டத்தில், ஸ்டார்ட்-அப் சூழல் பற்றிய கருத்துக்கணிப்பு 13 மொழிகளில் 7200 பயனாளிகளிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஐந்து வகைகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அவை ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள், முன்னணி செயல்திறன் கொண்ட மாநிலங்கள், தலைமை வகிக்கும் மாநிலங்கள், ஆர்வமாக வளரும் மாநிலங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு மாநிலங்கள்’ என பிரிக்கப்படுள்ளன.

இந்த தரவரிசையில், குஜராத், மேகாலயா மற்றும் கர்நாடகா சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. கேரளா, மராட்டியம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகியவை முன்னணி செயல்திறன் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தரவரிசையில், புதுமையான மற்றும் பரவலான தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளுடன் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை முன்னெடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தலைமை வகிக்கும் மாநிலங்கள் பிரிவில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது.


புதிதாக தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு உகந்த சூழல் பெங்களூரு, தேசியத் தலைநகர்ப்பகுதி, மும்பை ஆகிய நகரங்களில் இருக்கும் அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave your comments here...