சட்டவிரோதமாக மாடு கடத்தும் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்துசக்தி கூட்டமைப்பு ராமரவிகுமார் வலியுறுத்தல்!

தமிழகம்

சட்டவிரோதமாக மாடு கடத்தும் மாஃபியாக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்துசக்தி கூட்டமைப்பு சார்பில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிகுமார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளார். இதில் பாரத் இந்து முன்னனி தலைவர் ஆர்.டி.பிரபு இந்து இயக்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

அந்த மனுவில் 1.பசுமாடுகளை சட்டவிரோதமாக லாரிகளில் எடுத்துச் செல்லக்கூடிய மாடு கடத்தும் கும்பல்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்ரீத்துக்கு பொது இடங்களில் ஒட்டகம் பசுமாடுகள் அறுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை, விலங்குகள் நல ஆணையம் அறிவுரையை அனைத்து மாநிலங்களும் மாவட்டங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு கடத்தும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும் நபர்கள் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிதிகளை பின்பற்றாது லஞ்ச லாவண்யம் பெரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் இந்துசக்தி கூட்டமைப்பு சார்பாக இந்து இயக்க தலைவர்கள் ஒருங்கிணைந்து வழங்கியுள்ளார்கள்.

Leave your comments here...