மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

உள்ளூர் செய்திகள்சமூக நலன்

மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள நரிக்குடி பகுதியில், சொட்டமுறி பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. பேருந்து நிறுத்தம் அருகே மதுக்கடை செயல்பட்டு வருவதால், அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மதுக்கடையில் போதை ஆசாமிகளின் ஆபாச பேச்சுகளால் அந்தப்பகுதிக்கு செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று சொட்டமுறி கிராம மக்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் திரண்டுவந்து காரியாபட்டி – நரிக்குடி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த நரிக்குடி காவல்நிலைய ஆய்வாளர் ராமநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானம் பேசினர். கிராம மக்களின் கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில், கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...