நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு…! இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி

உள்ளூர் செய்திகள்

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு…! இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு…!  இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அந்த கட்சியின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது” ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.


முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. சவுதி அரேபியா பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்தை “இன்சுலேடிங்” என்று விவரித்தது மற்றும் “நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஹம்மது நபியைப் பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை சவுதி அரேபியா கண்டித்துள்ளது மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை வரவேற்றுள்ளது. சவூதி அரேபியாவின் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல்-சவுத் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம், நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை அளிக்கும் நாட்டின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

Leave your comments here...