87 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் கமிஷன் அதிரடி..!

இந்தியா

87 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் கமிஷன் அதிரடி..!

87 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து –   தேர்தல் கமிஷன் அதிரடி..!

வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது, முகவரியை புதுப்பிக்காதது என, காணாமல் போன, 87 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும்.கடந்தாண்டு செப்., நிலவரப்படி நாட்டில், 2,796 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. கடந்த, 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது, 300 சதவீத உயர்வாகும். வெறும் பெயருக்கு மட்டும் கட்சியை துவக்கி, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட சலுகைகளை சிலர் பெற்று வந்தனர்.

மேலும், கட்சியின் பெயரைக் காட்டி மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து, தேர்தல்களில் போட்டியிடாத, முறையாக கணக்குகள் தாக்கல் செய்யாத கட்சிகளின் பெயர்களை நீக்கி நடவடிக்கை எடுக்கப்போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இதன்படி, நாடு முழுதும் உள்ள, 2,100 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதிலிருந்து 87 கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, ஏற்கனவே குறிப்பிட்டிருந்த முகவரியில் இந்தக் கட்சிகள் இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave your comments here...