வீட்டில் தங்க வைர நகைகள் திருட்டு – வேலைக்காரர் கைது.!

தமிழகம்

வீட்டில் தங்க வைர நகைகள் திருட்டு – வேலைக்காரர் கைது.!

வீட்டில் தங்க வைர நகைகள் திருட்டு – வேலைக்காரர் கைது.!

மதுரை எஸ் .எஸ். காலனியில் ,வீட்டில் தங்க வைர நகைகள் திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். எஸ் .எஸ். காலனி அருள் நகர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அருண்ராஜ் 45 . இவரது வீட்டில், சம்பவத்தன்று முக்கால் பவுன் மோதிரம், வைரத்தோடு ஒரு ஜோடி, பணம் ரூ 5ஆயிரம் திருடு போய்விட்டது.

இந்த திருட்டு குறித்து அவர் , மதுரை எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திய போது வீட்டு வேலைக்காரர் திருடியது தெரியவந்தது . வீட்டின், வேலைக்காரர் மதுரை தனக்கங்குளம் வெங்கடமூர்த்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டி வயது 30. ஐ போலீசார் கைது செய்தனர்.

Leave your comments here...