விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிப்பு – கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்தியாசமூக நலன்

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிப்பு – கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிப்பு – கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லத்தில், ஆயுர்வேத மருத்துவ மாணவியாக இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், வரதட்சணை கேட்டு கணவர் கிரண்குமார் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறி, அவர் ‘வாட்ஸ் ஆப்’பில் படங்களுடன் உறவினர்களுக்கு தகவல் அனுப்பி இருந்தார்.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில், கிரண்குமார் குற்றவாளி என, நேற்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து, விஸ்மயாவின் தந்தை கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன், விஸ்மயா திருமணத்தில், 100 சவரன் நகை, ஒரு நிலம், கார் ஆகியவற்றை வழங்கினேன்.கார் வேண்டாம், 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு, கிரண்குமார் என் மகளை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு துாண்டியுள்ளார். இப்போது, என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...