உலகின் மகிழ்ச்சியான நாடு; 5வது முறையாக பின்லாந்துக்கு முதலிடம்.!

உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடு; 5வது முறையாக பின்லாந்துக்கு முதலிடம்.!

உலகின் மகிழ்ச்சியான நாடு; 5வது முறையாக பின்லாந்துக்கு முதலிடம்.!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், 5வது முறையாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல், மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், வட ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடம் வகிக்கிறது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வட ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. மத்திய கிழக்கு நாடான லெபனான், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 16 வது இடமும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு 15வது மற்றும் 20வது இடமும் கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

Leave your comments here...