மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு : மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

தமிழகம்

மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு : மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு : மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ₹1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அற்புதமான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு ₹2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

மேலும், 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (₹2,500 மற்றும் ₹50 வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும்.மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ₹1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து மாதாந்திர குலுக்கல் நடத்தப்படும். அதில் 10 பயணிகளுக்கு தல ₹2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து மாதாந்திர குலுக்கல் நடத்தப்படும். மேலும், இதில் குறைந்தபட்ச தொகையான ₹500 டாப் அப் செய்திருந்தால் ₹1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ₹2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இந்த திட்டங்கள் நாளை (21ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும். மேலும், இந்த பரிசு விவரங்களை தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...