11 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் வசூலித்த ரயில் டிக்கெட் பரிசோதகர்..!

இந்தியா

11 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் வசூலித்த ரயில் டிக்கெட் பரிசோதகர்..!

11 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் வசூலித்த ரயில் டிக்கெட் பரிசோதகர்..!

கொரோனா காலத்தில் எப்படி உலகில் எல்லா தொழில்களும் முடங்கி போனதோ அப்படியே இந்தியாவில் ரயில்வே நிர்வாகமும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிலையிலும் ஒரு டிக்கெட் பரிசோதகர் வெறும் 11 மாதத்தில் ரூ1 கோடி அபராதம் வசூலித்துள்ளார்.

இந்த செய்தி தற்போது டிரெண்டாகி வருகிறது. நாம் ரயில்களில் பயணிக்கும் போது டிடிஆரை பார்த்திருப்போம். நாம் பயணிக்கும் போது அவர்கள் நம் டிக்கெட்டை பரிசோதனை செய்வார்கள். டிக்கெட் இல்லாமல் அல்லது வேறு கம்பார்ட்மெண்டிற்கு டிக்கெட் எடுத்துவிட்டு வேறு கம்பார்ட்மெண்ட்டில் பயணிக்கும் பயணிகளும் அபராத கட்டணம் வசூலிப்பார்கள்.

இந்நிலையில் மத்திய ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றி வரும் முகம்மது சம்ஸ் சந்த் என்பவர் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 பிப்ரவரி வரை 11 மாதத்தில் மொத்தம் 13472 டிக்கெட் இல்லா பயணிகளிடம் அபராதம் வசூலித்துள்ளார். அவர் வசூலித்த தொகை மட்டும் ரூ1,06,41,105 ஆகும். டிக்கெட் இல்லாத பயணிகள் என்றால் வேறு கம்பார்மெண்ட்டிற்கு டிக்கெட் எடுத்துவிட்டு மற்றொரு கம்பார்ண்ட்டில் பயணிப்பவர்கள் மற்றும் டிக்கெட்டே இல்லாதவர்கள் என இருவரும் அடங்குவார்கள்.

மும்மது கடந்த 2000வது ஆண்டில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே பணியில் சேர்ந்தவர் இவர் கடந்த 2012 வரை மத்திய ரயில்வே ஹாக்கி அணியில் விளையாடி வந்தார். தற்போது முழு நேரமாக டிக்கெட் பரிசோதனைசெய்யும் பணியை மட்டுமே செய்து வருகிறார். இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு முதன் முறையாக ரூ 1 கோடி அபராதம் வசூலித்த முதல் டிக்கெட் பரிசோதகர் இவர் தான்.

Leave your comments here...