பெயர் தெரியாத நன்கொடையாளர் : காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் நன்கொடை..!

ஆன்மிகம்இந்தியா

பெயர் தெரியாத நன்கொடையாளர் : காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் நன்கொடை..!

பெயர் தெரியாத நன்கொடையாளர் : காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் நன்கொடை..!

பெயர் தெரியாத நன்கொடையாளர் ஒருவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கத்தை நன்கொடையாக கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த பிப்.,27ல் பிரதமர் மோடி வாரணாசி வந்தபோது, கோவிலின் உள் சுவர்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது.

காசி விஸ்வநாதர் கோவில் வரலாற்றின் படி, 1777 ஆம் ஆண்டு இந்தூரின் மகாராணியான அஹில்யாபாய் ஹோல்கர் கோயிலை புனரமைத்தார். இதற்காக பஞ்சாபின் மகாராஜா ரஞ்சித் சிங் சுமார் ஒரு டன் தங்கத்தை நன்கொடையாக அளித்ததாக கூறப்படுகிறது. அதைக் கொண்டு கோவிலின் இரண்டு கோபுரங்களை தங்கத்தால் அலங்கரித்துள்ளனர். 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கோயிலின் எந்தப் பகுதியிலும் தங்கத்தால் அலங்கரிக்கப்படாத நிலையில், இரண்டாவது முறையாக இந்த மிகப்பெரிய பணியை பிரதமர் மோடி கோயிலை பார்வையிட வருவதற்கு முன்னதாக கோவில் நிர்வாகம் முடிந்துள்ளது.

இதுகுறித்து தகவல்களை உறுதிபடுத்தியுள்ள வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால், ‛பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட 60 கிலோ தங்கத்தில், 37 கிலோ கருவறையின் உள் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 23 கிலோ பிரதான கட்டமைப்பின் தங்கக் குவிமாடத்தின் கீழ்ப் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கோயிலின் உள் சுவர்களை தங்கத்தால் அலங்கரிக்கும் பணியை செய்து வருவதாகவும், கருவறையின் சுவர்களை கலை நயம் மிக்க செப்புத் தாள்களால் வார்த்து, அதைச் சுவரில் பொருத்திய பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்” என அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்கத்தை நன்கொடையாக கொடுத்த நபர், மோடியின் தாயான ஹீராபெனின் எடைக்கு நிகராக 60 கிலோ தங்கத்தை வழங்கியதாகவும், தான் மோடியின் ரகசின் என்பதால் அவர் தொடங்கியுள்ள ஆலய பணிக்கு தங்கத்தை நன்கொடையாக கொடுக்க விரும்புவதாகவும் கோயில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலை விரிவுபடுத்துவதற்கான பணிகள் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் விதமாக படித்துறையில் இருந்து 320 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அருங்காட்சியகம், தங்கும் அறைகள், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், சுற்றுலா மையம், உணவு கூடங்கள் என மொத்தம் 23 கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இதனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...