உக்ரைனுக்கு 2 டன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா..!

இந்தியாஉலகம்

உக்ரைனுக்கு 2 டன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா..!

உக்ரைனுக்கு 2 டன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா..!

போரில் சிக்கி தவிக்கும் உக்ரைன், மனிதாபிமான உதவி அளிக்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, இந்தியா முதல்கட்ட மனிதாபிமான உதவி பொருட்களை நேற்று அனுப்பி வைத்தது. 2 டன் மருந்துகள் மற்றும் முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், குளிரை தாங்கும் ஆடைகள், கூடாரங்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், பாய்கள், சோலார் விளக்குகள் ஆகியவற்றை தேசிய பேரிடர் மீட்பு பணி உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த பொருட்களுடன் நேற்று டெல்லியில் இருந்து 2 விமானங்கள் புறப்பட்டு சென்றன. போலந்து மற்றும் ருமேனியா வழியாக அவை உக்ரைனுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும்.இதுபோல், இரண்டாம் கட்ட நிவாரண உதவி பொருட்களை ஏற்றிக்கொண்டு, இன்று (வியாழக்கிழமை) மற்றொரு விமானம் போலந்து வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்தார்.

Leave your comments here...