மே 6ம் தேதி கேதார்நாத் சிவன் கோவில் திறப்பு..!

ஆன்மிகம்

மே 6ம் தேதி கேதார்நாத் சிவன் கோவில் திறப்பு..!

மே 6ம் தேதி கேதார்நாத்  சிவன்  கோவில்  திறப்பு..!

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர்சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, இமயமலைப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலான கேதார்நாத், ஆண்டு தோறும் குளிர்காலத்தில் மூடப்படும்.

இதையடுத்து, கோவிலின் உற்சவரான பஞ்சமுக சிவனுக்கான வழிபாடுகள், உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஓம்காரேஷ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் நிர்வாகி ஹரிஷ் கவுட் பங்கேற்றார். பின், கேதார்நாத் கோவில், மே 6ம் தேதி காலை 6:25 மணிக்கு திறக்கப்படும் என அவர் கூறினார். முன்னதாக, மே 2ம் தேதி ஓம்காரேஷ்வர் கோவிலில் உள்ள பஞ்சமுக சிவன் சிலை, அலங்கார பல்லக்கில் கேதார்நாத் கோவிலுக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது

Leave your comments here...