ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை..!

இந்தியா

ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை..!

ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை..!

இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளை சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா 3வது அலையில் இந்தியா உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பாதிப்புகள் குறைந்து வருவதால், கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது.

முன்னதாக கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாதவர்களுக்கான பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் நீக்கியது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடாமல் இருப்பதற்காகவும், தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போர் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பயணிகள் மத்தியில் எப்போது அன் ரிசர்வ் பெட்டிகள் சேவை தொடங்கும், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உடனடியாக அனைத்து பகுதிகளிலும் இல்லாமல், இதனை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Leave your comments here...