12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியா

12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு ஒப்புதல்..!

12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி –  மத்திய அரசு ஒப்புதல்..!

12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மாதிரிகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், அதில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல முடிவு கிடைத்துள்ளது.

இந்நிலையில் 12 – 18 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை அளித்துள்ளது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் இதற்கான ஆவணங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு  அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால், நாட்டில் விரைவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

Leave your comments here...