ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி”  – கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் இயங்கிய மயிலாப்பூர் கிளப்புக்கு ‘சீல்..!

தமிழகம்

ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி”  – கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் இயங்கிய மயிலாப்பூர் கிளப்புக்கு ‘சீல்..!

ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி”  – கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் இயங்கிய மயிலாப்பூர் கிளப்புக்கு ‘சீல்..!

சென்னை மயிலாப்பூர் கிளப், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 24 கிரவுண்ட் நிலத்தை  குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாத வாடகை இரண்டரை லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு,  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 ஆயிரம் முறை உயர்த்தி அளிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு,  குத்தகை ஒப்பந்தம் நடந்து வருகிறது.  கடந்த 2016ஆம் ஆண்டு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டால் மாத வாடகையாக ரூபாய் 4.5 லட்சம் செலுத்த வேண்டும் என கோவில் நிர்வாகம் கிளப் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.ரூ. 3 கோடி வரை பாக்கி உள்ளதால் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மயிலாப்பூர் கோவில் இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் இதை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார்.  கோவில் சொத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே கைவிட வேண்டும். கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக் கொண்ட பிறகு வெளி தன்மையுடன் கோயிலையும், அதன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரிகளுக்கு உண்டு. முறைகேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாப்பூர் கிளப்பிற்கு  கடந்த 2016 ஆம் ஆண்டு வாடகை பாக்கி வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியது சரியானதுதான்.  எனவே இதை  ரத்து செய்ய முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி உள்ளதால் சென்னை மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைத்தனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.  ஜனவரி 31ஆம் தேதி வரை அறநிலையத்துறைக்கு ரூபாய் 4 கோடி வாடகை செலுத்த வேண்டியிருந்த நிலையில் , பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு கோடிக்கான காசோலையை மட்டும் வழங்கியது மயிலாப்பூர் கிளப். இதன் அடிப்படையில் பாக்கிதொகைக்காக மயிலாப்பூர் கிளப் சீல் வைக்கப்பட்டது. 

Leave your comments here...