தேர் விழாவிற்கு தடை : மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது : ஐகோர்ட் உத்தரவு.!

சமூக நலன்

தேர் விழாவிற்கு தடை : மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது : ஐகோர்ட் உத்தரவு.!

தேர் விழாவிற்கு தடை : மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது : ஐகோர்ட் உத்தரவு.!

பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் பவனி நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வரதராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தது:- தங்கள் ஊரில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் என்ற 3 கோவில்கள் உள்ளன. இந்த கோயில்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவில்களுக்கு கடந்த 200 ஆண்டுகளாக திருவிழா மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஊரில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாக தேர் இழுத்து வழிப்பாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு தேர் திருவிழாவில் முதல் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தேர்ப்பவனி நிறுத்தப்பட்டது. போலீசார் தேர் திருவிழா நடத்த அனுமதி தர மறுக்கிறார்கள். எனவே, தேர் இழுத்து வழிப்பாடு நடத்த அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென கூறிய இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருவாய் வட்டார அதிகாரி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டார். பின்னர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது..

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது:- வழிபாடு நிகழ்வின்போது பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மட்டுமே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் கட்டுப்பாடு என்று கூறி, இறை வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை எனவும், ஆகையால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், கிராம மக்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வுகண்டு தேர் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்.

Leave your comments here...