அரசுப் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் – பட்டியலை வெளியிட்ட போக்குவரத்துத்துறை..!

தமிழகம்

அரசுப் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் – பட்டியலை வெளியிட்ட போக்குவரத்துத்துறை..!

அரசுப் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் – பட்டியலை வெளியிட்ட போக்குவரத்துத்துறை..!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்கள் மோசமானதாகவும் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாக நீண்ட நாள்களாக புகார்கள் இருந்துவருகின்றன. இந்தநிலையில், சமீபத்தில் இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் நெடுந்தூரம் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்துகளை நிறுத்துவது வழக்கம். தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவித புகாருமின்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்ட விவரம், உணவுக்காக நிறுத்திய விவரங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...