ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு – சிலையை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியா

ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு – சிலையை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு..!

ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு – சிலையை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு..!

வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ 1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் வைஷ்ண குரு ராமானுஜர். நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று சமத்துவத்தை பரப்பியவர். ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சிபுரம் கோயில்களுக்கு சென்று, பூஜை நடைமுறைகளை வழிநடத்தி செயல்படுத்தியவர். அவரின், 1,000மாவது ஜெயந்தியை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், அவருக்கு 216 அடி உயர சிலை நிறுவ திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.அவரின், 1,000மாவது ஜெயந்தியை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், அவருக்கு 216 அடி உயர சிலை நிறுவ திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. அதன்படி, திரி தண்டி சின்னஜீயர் தலைமையில், அவரின் ஆசிரமத்தில், 40 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் செலவில், ராமானுஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. . சிலையின் கீழ் பகுதி கர்ப்பக் கிரஹத்தில், 108 கிலோ எடையுள்ள ராமானுஜர் தங்க விக்ரஹம் நிறுவப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று இந்த பெருமை மிகுந்த சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சின்ன ஜீயர் ஆசிரமத்திற்கு வந்தார். மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலையை திறந்துவைத்தார்.

சிலையை திறந்த வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலையை திறந்துவைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வசந்த பஞ்சமி தினத்தில் ராமானுஜர் திறப்புவிழா நடைபெறுவது மிகவும் சிறப்பானது. இங்கு நடத்தப்படும் யாகங்களின் பலனை, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

ராமானுஜர் வடமொழியில் உரைகள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளார். ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு. அவருக்கு நெருங்கிய தொடர்புடைய ஆலயங்களில் திருப்பாவை முக்கியத்துவம் பெருகிறது. ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும். உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வனக்கங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave your comments here...