சட்ட விரோத மணல் குவாரி வழக்கு – பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகனை கைது செய்தது அமலாக்கத்துறை..!

இந்தியா

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபில் சட்ட விரோத மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது அமலாக்கத்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையில், அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

மேலும் ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து பூபிந்தா் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று ஜலந்தரில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு பூபிந்தா் சிங் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து பூபிந்தா் சிங்கை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...