தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ..!

தமிழகம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ..!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நேற்று திருப்பி அனுப்பினார். கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாளை தமிழக அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி பிப்.7-ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிறகு 9ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்புகிறார்.நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave your comments here...