ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை கைவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தமிழகம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை கைவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை கைவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் செய்ய திட்டமிட்டுள்ள திருத்தங்கள், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் . மத்திய அரசின் வசம் அதிகார குவிப்பிற்கு வழிவகுக்கும்.

மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வலியுறுத்துவது நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும். மத்திய அரசு, வெளிச்சந்தையில் இருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறையால், மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்பும் அதிகாரிகளின் ஆர்வத்தையும் வெகுவாக குறைத்துள்ளது. புதிய சட்ட திருத்தமானது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி என்பதை சேதமடைய செய்துவிடும்.

சட்ட திருத்தத்தின்படி, அரசு பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையும், அலுவலர்கள் இடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும். இதனை செயல்படுத்தினால், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சி பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்தது அல்ல.

புதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...