சமாஜ்வாடி கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்…!

அரசியல்

சமாஜ்வாடி கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்…!

சமாஜ்வாடி கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்…!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹல் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பாஜகவில் இருந்து பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் உயரமான மனிதராக அறியப்படும் தர்மேந்திர பிரதாப் சிங், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் 8 அடி 2 அங்குலம் கொண்ட நாட்டின் மிக உயரமான மனிதராக அறியப்படுகிறார். தேர்தலையொட்டி அவர் கட்சியில் இணைந்ததது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளர். கட்சியின் கொள்கைகள், அகிலேஷ் யாதவின் தலைமை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அவர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...