நீர் மேலாண்மை : தேசிய அளவில் தமிழகம் 3வது இடம் – சிறந்த பள்ளி உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது வென்று அசத்தல்..!

இந்தியா

நீர் மேலாண்மை : தேசிய அளவில் தமிழகம் 3வது இடம் – சிறந்த பள்ளி உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது வென்று அசத்தல்..!

நீர் மேலாண்மை : தேசிய அளவில் தமிழகம் 3வது இடம் – சிறந்த பள்ளி உள்ளிட்ட 6 பிரிவுகளில்  விருது வென்று அசத்தல்..!

2020-ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த பள்ளி உள்ளிட்ட 6 பிரிவுகளில் தமிழகம் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கான விருதுகளை, மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அறிவித்துள்ளார்.

அதில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் தமிழகம் முறையே அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சிறந்த பள்ளியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது. தெற்கு பிராந்தியத்தில் சிறந்த கிராம பஞ்சாயத்தாக, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வெள்ளபுத்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது பட்டியலில், மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா கேந்த்ரா, இரண்டாவது சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனமாக தேர்வாகியுள்ளது. சிறந்த தொழில்நிறுவனத்திற்கான பட்டியலில், ஹூண்டாய் மோட்டார் லிமிடெட் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதனிடையே, நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த ஊடகமாக நெட்வொர்க் 18 குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரை சிக்கனமாக சேகரிப்பது, நீர் வீணாவதை தவிர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக, நெட்வொர்க் 18 குழுமம் மிஷன் பானி எனும் முயற்சியை முன்னெடுத்தது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்ட இந்த விழிப்புணர்வு முயற்சியை பாராட்டும் விதமாக, நெட்வொர்க் 18 குழுமத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்து கவுரவித்துள்ளது.

Leave your comments here...