சபரிமலைக்கு சென்ற முதல் பெண் பிந்து அம்மணி மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு தாக்குதல்..!

இந்தியா

சபரிமலைக்கு சென்ற முதல் பெண் பிந்து அம்மணி மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு தாக்குதல்..!

சபரிமலைக்கு சென்ற முதல் பெண் பிந்து அம்மணி மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு தாக்குதல்..!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு வெளியானதும் 2019-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெ ண்ணிய ஆர்வலர்கள் பிந்து அம்மணி மற்றும் கனகதுர்க்கா ஆகியோர் சபரிமலை சென்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் பிந்து அம்மணி, கனகதுர்க்கா இருவரையும் சிலர் தாக்கும் சம்பவங்களும் நடந்தன.

இச்சம்பவங்கள் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் பிந்து அம்மணி கோழிக்கோடு கடற்கரை பகுதிக்கு நேற்று சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பிந்து அம்மணியை சரமாரியாக தாக்க தொடங்கினார்.

இதை எதிர்ப்பார்க்காத பிந்து அம்மணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும், தாக்குதல் நடத்தியவர் ஓடிவிட்டார்.

இதுபற்றி பிந்து அம்மணி போலீசில் புகார் செய்தார் மேலும் அவர் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக பிந்து அம்மணி கூறும்போது, தன்னை சிலர் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், இது குறித்து பல முறை புகார் கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...