புதிய நகராட்சிகளுக்கு கமிஷனர்கள் நியமனம்..! எந்த நகராட்சிகளில் யார் யார்…?

தமிழகம்

புதிய நகராட்சிகளுக்கு கமிஷனர்கள் நியமனம்..! எந்த நகராட்சிகளில் யார் யார்…?

புதிய நகராட்சிகளுக்கு கமிஷனர்கள் நியமனம்..! எந்த நகராட்சிகளில் யார் யார்…?

புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கை: பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை. தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர். காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் நகராட்சி மேலாளர் பால்ராஜ் காரமடை நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் சரவணன் உளூந்தூர்பேட்டை நகராட்சி ஆணையராகவும், சென்னை நகராட்சி நிருவாக அலுவலக கண்காணிப்பாளர் விஜயா கூடலூர் நகராட்சி ஆணையராகவும், உடுமலைப்பேட்டை நகராட்சி மேலாளர் பிச்சைமணி மதுக்கரை நகராட்சி ஆணையராகவும், கலவை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசந்திரன் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் கனிராஜ் புகலூர் நகராட்சி ஆணையராகவும்,

பல்லவபுரம் நகராட்சி மேலாளர் குமார் இலால்குடி நகராட்சி ஆணையராகவும், திருப்பூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் முகமது சம்சுதின் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் ஆண்டவன் திட்டக்குடி நகராட்சி ஆணையராகவும், பழநி நகராட்சி மேலாளர் குணாளன் வடலூர் நகராட்சி ஆணையராகவும், விழுப்புரம் நகராட்சி மேலாளர் திருமதி க்ஷி.லி.ஷி.கீதா திருக்கோவிலூர் நகராட்சி ஆணையராகவும், தேனி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக செயல் அலுவலர் கணேசன் திருநின்றவூர் நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் ரமேஷ் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் நேர்முக உதவியாளராகவும்,

சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் முத்துசாமி கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையராகவும், காஞ்சிபுரம் நகராட்சி மேலாளர் பரந்தாமன் சோளிங்கர் நகராட்சி ஆணையராகவும், கடலூர் நகராட்சி மேலாளர் வெங்கடேசன் கொல்லன்கோடு நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் கோபிநாத் பள்ளிப்பாளையம் நகராட்சி ஆணையராகவும், சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் பானுமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராகவும், மேட்டூர் நகராட்சி மேலாளர் செல்வராஜ் காலியாகவுள்ள கீழக்கரை நகராட்சி ஆணையராகவும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக செயல் அலுவலர் லெனின் சுரண்டை நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் வேலன் திருச்செந்தூர் நகராட்சி ஆணையராகவும்,

தஞ்சாவூர் மண்டல நகராட்சி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் மனோகரன் முசிறி நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் மங்கையக்கரசன் தாரமங்கலம் நகராட்சி ஆணையராகவும், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக செயல் அலுவலர் சுமா மாங்காடு நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் சசிக்குமார் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராகவும், செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர்தனலட்சுமி பொன்னேரி நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் கண்ணன் மானாமதுரை நகராட்சி ஆணையராகவும், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிப்பாளையம் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இடங்கனசாலை நகராட்சி ஆணையராகவும், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் முத்துக்குமார் களக்காடு நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் தாமோதரன் குன்றத்தூர் நகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் இளம்பரிதி நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையராகவும் நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...