இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியா

இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இயற்கை விவசாயம் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடக்கும் தேசிய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்றைய நிகழ்ச்சியில் 8 கோடி விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு மூலம் கிடைக்கும் பலன்கள், குஜராத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். உணவு பதப்படுத்துதல், இயற்கை விவசாயம் ஆகியவை விவசாய துறையை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

விவசாயத்தை வேதியியல் ஆய்வகத்தில் இருந்து அகற்றி, இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டும். இயற்கை ஆய்வகம் குறித்து பேசும் போது, அது முற்றிலும் அறிவியல் சாய்ந்தது. விதை முதல் மண் வரை, அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வானது இயற்கை முறையில் கிடைக்க செய்ய வேண்டும்.


விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கை விவசாயம் மூலம் மட்டுமே அதிக பயிர்களை நடவு செய்ய முடியும். அடிப்படைக்கு திரும்புவோம் என்ற கொள்கையை உலக நாடுகள் பின்பற்ற துவங்கி உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் வருமானம் பெருகும். நமது உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இயற்கை விவசாயம், நாட்டில் உள்ள 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். சிறு விவசாயிகள் அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர்.. ஆனால், இயற்கை உரத்தை பயன்படுத்தினால், அவர்களுக்கு பலன் கிடைக்கும். விவசாய தொழில்நுட்பங்களில் தவறுகளை அகற்ற வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதால், நிலத்தின் உற்பத்தி திறன் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், வேளாண் கழிவுகளை எரிப்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave your comments here...