விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் திட்டமிட்ட சதி – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு விசாரணைக்குக் குழு..!

இந்தியா

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் திட்டமிட்ட சதி – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு விசாரணைக்குக் குழு..!

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் திட்டமிட்ட சதி – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு விசாரணைக்குக் குழு..!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார், விவசாயிகள் மீது மோதி நிற்காமல் வேகமாகச் சென்றது.

இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதன் கண்காணிப்பு நீதிபதியாக பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு விசாரணை குழுவுடன் சேர்த்தது.

இந்நிலையில், லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி, எதார்த்தமாக நடந்தவை அல்ல என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்து உள்ளது.

மேலும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீதும் கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து உள்ளது.

Leave your comments here...