3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி – சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்

இந்தியா

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி – சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி –  சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

12-வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் – டி தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 12-வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி (கோவேவக்ஸ்) தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அடர் பூனவல்லா தெரிவித்தார்.

Leave your comments here...