பேருந்துகளில் தீ விபத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள் கட்டாயம் – மத்திய அரசு..!

இந்தியா

பேருந்துகளில் தீ விபத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள் கட்டாயம் – மத்திய அரசு..!

பேருந்துகளில் தீ விபத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள் கட்டாயம் – மத்திய அரசு..!

பேருந்துகளில் தீ விபத்தைக் கண்டறிவதற்கான அலாரம், அதனைத் தடுப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் போன்றவற்றை விதிமுறைகளுக்கு ஏற்ப அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்

மக்களவையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில்:- பேருந்துகளில் தீ விபத்தைக் கண்டறிவதற்கான அலாரம், அதனைத் தடுப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் போன்றவற்றை விதிமுறைகளுக்கு ஏற்ப அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டைப்-3 பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றில் தீப்பற்றியதைத் தெரிவிக்கும் அலாரம், பாதுகாப்பு சிஸ்டம் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை இது குறித்து தெரிந்து கொள்வதற்காக அந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளாக 5803 கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2016-ல் 5755 விபத்துகளில் 2074 பேரும், 2017-ல் 5752 விபத்துகளில் 2096 பேரும், 2018-ல் 5071 விபத்துகளில் 1796 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்துகளைக் குறைக்க சாலைப் பாதுகாப்பு அடிப்படையில் பல்வேறு நடைமுறை உத்திகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் / மாதம் கடைப்பிடிப்பது, சாலை விதிகள் மற்றும் அவற்றை பயன்படுத்துதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர அண்மையில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்த) சட்டம் 2019 மூலம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாலை விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வாகனத் திருட்டைத் தடுக்க ஆன்லைன் போர்ட்டல் வாகனங்கள், கைபேசிகள், ஆவணங்கள் ஆகியவை திருடப்பட்டால் மின்னணு முறையில் புகார் அளிக்க தில்லி, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் இந்த மின்னணு புகார் முறை செயல்படுவது குறித்து தெரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Leave your comments here...