ரேஷன் கடைகளில் மினி எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை : 3 மாநிலங்களுக்கு அனுமதி..!

இந்தியா

ரேஷன் கடைகளில் மினி எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை : 3 மாநிலங்களுக்கு அனுமதி..!

ரேஷன் கடைகளில் மினி எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை : 3 மாநிலங்களுக்கு அனுமதி..!

நியாய விலைக்கடைகளில் மினி எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்ய 3 மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மகாராஷ்ட்ரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இத்தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இலக்கிடப்பட்ட பொது விநியோக முறை கட்டுப்பாட்டு ஆணை 2015ன் கீழ், நியாயவிலைக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் தவிர்த்த இதர பொருட்களை விற்க இந்தக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...