இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரம் சென்னை- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சமூக நலன்

குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் சார்பாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்:-பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு தனிப்பிரிவு ஒன்றை முதல்வர் தொடங்கி உள்ளதாக கூறினார். மேலும் மாணவர்கள் முன்பின் தெரியாதவர்களுடன் சமூக வலைதளங்களில் சாடிங், பிராண்ட் ரிக்யூஸ்ட்  உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார். நல்ல நண்பர்களுடன் மாணவர்கள் பழக வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Leave your comments here...