தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – கேரளாவுக்கு பொதுப்போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

தமிழகம்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – கேரளாவுக்கு பொதுப்போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – கேரளாவுக்கு பொதுப்போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,

பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. ஏற்கனவே ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

Leave your comments here...