பதவியேற்றபோது “வெல்க உதயநிதி” என கூறிய திமுக எம்.பி – வெளியே முழக்கமிடுங்கள் என்ற வெங்கய்ய நாயுடு!

அரசியல்இந்தியா

பதவியேற்றபோது “வெல்க உதயநிதி” என கூறிய திமுக எம்.பி – வெளியே முழக்கமிடுங்கள் என்ற வெங்கய்ய நாயுடு!

பதவியேற்றபோது “வெல்க உதயநிதி” என கூறிய திமுக எம்.பி – வெளியே முழக்கமிடுங்கள் என்ற வெங்கய்ய நாயுடு!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது புதிதாக தேர்வான மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவியேற்றுகொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் தி.மு.க.வை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்.பி.யாக பதவியேற்று கொண்டனர். மூவரும் தமிழில் பதவியேற்றனர்.

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று கூறினார். அப்போது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது என்றும் வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்றும் தெரிவித்தார்.

Leave your comments here...