இந்தியா டுடே’வின் சிறந்த மாநிலத்திறகான விருது அறிவிப்பு.! ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம்.!

இந்தியாதமிழகம்

இந்தியா டுடே’வின் சிறந்த மாநிலத்திறகான விருது அறிவிப்பு.! ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம்.!

இந்தியா டுடே’வின் சிறந்த மாநிலத்திறகான விருது அறிவிப்பு.! ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே  தொடர்ந்து 4 ஆண்டுகளாக  தமிழ்நாடு  முதலிடம்.!

இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு இந்த விருதினை பெறுகிறது.

இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்

>கடந்த காலத்தை விட முன்னேறிய மாநிலப் பட்டியலில் பீகாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. >பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலுங்கானா அறிவிக்கப்பட்டுள்ளது.

>அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>சுகாதாரத்தில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது.

>கல்வியில் முதலிடம் இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.

>சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் குஜராத் மாநிலம இந்திய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.

>நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

>ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

>அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக ஹரியானா முதலிடத்தில் உள்ளது.

>சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பதில் கேரளா முதலிடம்.

>சுத்தமாக உள்ள மாநிலத்தில் பஞ்சாபிற்கு முதலிடம்.

>ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave your comments here...