கோவையில் இரவில் ரயில் மோதி 3 யானைகள் பலியான பரிதாபம்..!

தமிழகம்

கோவையில் இரவில் ரயில் மோதி 3 யானைகள் பலியான பரிதாபம்..!

கோவையில் இரவில் ரயில் மோதி 3 யானைகள் பலியான பரிதாபம்..!

கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற குட்டி உள்பட மூன்று யானைகள், ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகின.

கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை என்ற இடம் உள்ளது. இங்கு உள்ள ரயில்வே தண்டவாளத்தை, நேற்றிரவு, பெண் யானை உட்பட மூன்று யானைகள், கடக்க முயன்றன.

அப்போது, அவ்வழியாக கேரளாவில் இருந்து மங்களூர்- – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) யானைகள் மீது மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, அதே இடத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன.

சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு, மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாகும் சம்பவம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...