நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் : நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலத்தில் பீகார் முதலிடம்..!

இந்தியா

நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் : நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலத்தில் பீகார் முதலிடம்..!

நிதி ஆயோக் வெளியிட்ட  பட்டியல் : நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலத்தில் பீகார்  முதலிடம்..!

நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

நாட்டில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களைக் கொண்டு நிதி ஆயோக் ஆய்வு செய்து ‘பல பரிமாண வறுமை குறியீடு’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடந்து மத்திய பிரதேசம் (36.65 சதவீதம்) 4-வது இடத்திலும், மேகாலயா (32.67 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன.

கேரளா (0.71 சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் வறுமை இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.

Leave your comments here...