புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

சமூக நலன்

புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு ரூ.5000  நிவாரணம் வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மஞ்சள் அட்டைக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அத்தியாவாசிய தேவைகளுக்கு சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து கட்டட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். பின்னர், சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது மஞ்சள் அட்டைதார்களுக்கும் (வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு) தலா ரூ.5000  வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5000 மழை நிவாரணம் கிடைக்கும். புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக முதல் கட்டமாக 300 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரங்கசாமி கேட்டுகொண்டுள்ளார்.

Leave your comments here...