விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்த வெள்ளரிக்காய்…!

சமூக நலன்

விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்த வெள்ளரிக்காய்…!

விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்த  வெள்ளரிக்காய்…!

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், தொற்று பரவிய போதே உருண்டை பந்தில் முற்கள் இருப்பது போன்ற மேக்ரோ தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் நபரங்கபூர் மாவட்டம் சர்கூடா கிராமத்தை சேர்ந்த விவசாயி ரபி கிரண், விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்திருந்த வெள்ளரிக்காயை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதை அப்பகுதி விவசாயிகளுக்கு எடுத்து காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தில் இருந்த வெள்ளரிக்காயை போன்று அதே வடிவத்தில் நிறைய வெள்ளரிக்காய்கள் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து விஷயம் கேட்டு விவசாயிகள் பலர் அருகாமை பகுதிகளில் இருந்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர். பல உள்ளூர் ஆட்களும் அங்கே வந்து கொரோனா போன்று இருக்கும் வெள்ளரிக்காயை வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வெள்ளரிக்காய் ஏன் இப்படி கொரோனா போல தோற்றம் அளிக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. ஏதாவது பூச்சி கொல்லி மருந்தால் இப்படி ஆகி இருக்கலாம். அல்லது மரபணு மாற்றம் காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave your comments here...