மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாடு – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

இந்தியா

மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாடு – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாடு – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாட்டை நவம்பர் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொழிலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்குவதற்கு, உத்திப் பூர்வமான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க, இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசு, தொழில்துறை, கல்வித்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்ற சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களை ஒருங்கிணைப்பதே இந்த தனித்துவமான முன்முயற்சியின் நோக்கமாகும். பெரிய வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இந்திய மருந்து தொழிலில் உள்ள வாய்ப்புகளையும் இது பிரதிபலிக்கும்.

இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் 12 அமர்வுகள் நடைபெறும். 40-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள், சுற்றுச்சூழலை ஒழுங்குப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி அளித்தல், தொழில்-கல்வி கூட்டுறவு, புதுமையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக உரையாற்றுவார்கள்.

உள்நாட்டு மற்றும் உலக மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள், மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனம், ஐஐஎம் அகமதாபாத் மற்றும் பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொள்வார்.

Leave your comments here...