சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்: அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

அரசியல்சினிமா துளிகள்

சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்: அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்: அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், ஒரு சமுதாயத்தை குறிப்பிட்டு காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். படக்குழுவின் கவனத்துக்கு வந்தவுடன், அந்த காட்சி மாற்றி அமைக்கப்பட்டதாக நடிகர் சூர்யா விளக்கமளித்தார். எனினும், ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை, பாமகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட அந்த காட்சிக்கும், நடிகர் சூர்யாவுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லாதபோது, அவரை விமர்சிப்பது வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave your comments here...