மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ.95.82 ஆயிரம் கோடி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா

மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ.95.82 ஆயிரம் கோடி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ.95.82 ஆயிரம் கோடி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் மூலாதன செலவுகளை அதிகரிக்க ஏதுவாக அவற்றின் வரி பங்காக 95 ஆயிரத்து 82 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், மற்றும் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரியின் சார்பில் அம்மாநில முதமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநிலங்களின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையாக்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர்:- நவம்பர் 22ஆம் தேதி மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய 47 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு பதிலாக 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறினார். இந்த முன்கூட்டியே வழங்கப்படும் தவணை வரும் மார்ச் மாதத்தில் சரிகட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...